Kural 982
குறள் 982
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று
kunanalam saannor nalanae piranalam
yendhnalaththu ullathooum anru
Shuddhananda Bharati
Good in the great is character
Than that there is nothing better.
GU Pope
The good of inward excellence they claim,
The perfect men; all other good is only good in name.
The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights.
Mu. Varadarajan
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவருடைய பண்புகளின் நலமே; மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.
Parimelalagar
சான்றோர் நலன் குணநலமே - சான்றோர் நலமாவது குணங்களானாய நலமே; பிற நலம் எந்நலத்தும் உள்ளது அன்று - அஃது ஒழிந்த உறுப்புக்களானாய நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று.
விளக்கம்:
(அகநலத்தை முன்னே பிரித்தமையின், ஏனைப் புறநலத்தைப் 'பிற நலம்' என்றும், அது குடிப்பிறப்பும் கல்வியும் முதலாக நூலோர் எடுத்த நலங்களுள் புகுதாமையின், எந்நலத்துள்ளதூஉம் அன்று என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் சால்பிற்கு ஏற்ற குணங்கள் பொதுவகையான் கூறப்பட்டன.)
Manakkudavar
(இதன் பொருள்) சான்றோர்க்கு நலமாவது குணநல்லராகுதல்; குணநலம், பிற நல மாகிய எல்லா நலத்தினும் உள்ள தொரு நலமன்று,
(என்றவாறு). இது குணநலம் சால்பிற்கு அழகென்றது.