குறள் 981

சான்றாண்மை

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு

kadanyenpa nallavai yellaam kadanarindhthu
saanraanmai maetrkol pavarkku


Shuddhananda Bharati

Sublimity

All goodness is duty to them
Who are dutiful and sublime.


GU Pope

Perfectness

All goodly things are duties to the men, they say
Who set themselves to walk in virtue's perfect way.

It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good.


Mu. Varadarajan

கடமை இவை என்று அறிந்து சான்றாண்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம்‌ இயல்பான கடமை என்று கூறுவர்‌.


Parimelalagar

கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - நமக்குத் தகுவது இது என்று அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்லனவாய குணங்கள் எல்லாம் இயல்பாயிருக்கும் என்று சொல்லுவர் நூலோர்.
விளக்கம்:
(சில குணங்கள் இலவாயவழியும், உள்ளன செய்துகொண்டனவாய வழியும், சான்றாண்மை என்னும் சொற்பொருள் கூடாமையின், நூலோர் இவ்வேதுப் பெயர் பற்றி அவர் இலக்கணம் இவ்வாறு கூறுவர் என்பதாம்.)


Manakkudavar

சான்றாண்மையாவது நற்குணங்கள் பலவற்றானும் அமைந்தார் இலக்கணங் கூறுதல். இது பெரும்பான்மையும் அறத்தினால் தலையளி செய்தொழுகுவாரை நோக்கிற்று. (இதன் பொருள்) நமக்குத் தகுவது இதுவென்றறிந்து சான்றாண்மையை மேற் கொண்டொழுகுவார்க்கு, நல்லனவாய குணங்களெல்லாம் இயல்பாயிருக்கு மென்று சொல்லுவர் நூலோர்,
(என்றவாறு)