குறள் 980

பெருமை

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்

atrram maraikkum paerumai sirumaithaan
kutrramae koori vidum


Shuddhananda Bharati

Greatness

Weakness of others greatness screens
Smallness defects alone proclaims.


GU Pope

Greatness

Greatness will hide a neighbour's shame;
Meanness his faults to all the world proclaim.

The great hide the faults of others; the base only divulge them.


Mu. Varadarajan

பெருமைப்பண்பு பிறருடைய குறைபாட்டை மறைக்கும்‌; சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச்‌ சொல்லிவிடும்‌.


Parimelalagar

பெருமை அற்றம் மறைக்கும் - பெருமையுடையார் பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையாநிற்பர்; சிறுமை குற்றமே கூறிவிடும - மற்றைச் சிறுமையுடையார் பிறர் குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறிவிடுவார்.
விளக்கம்:
(மறைத்தலும் கூறலும ஏனையிடத்தும் இயைந்தன. அற்றம் - ஆகு பெயர். தான் என்பது அசை. இவை மூன்று பாட்டானும் இருவர் செயலும் ஒருங்கு கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) பெருமை பிறருடைய குறைவை மறைத்துச் சொல்லும் ; சிறுமை அவர்க்குள்ள நன்மை சொல்லுதலைத் தவிர்ந்து குற்றத்தையே சொல்லி விடும்,
(என்றவாறு). இது குற்றம் கூறாமை பெருமையென்று கூறிற்று.