குறள் 979

பெருமை

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்

paerumai paerumitham inmai sirumai
paerumitham oorndhthu vidal


Shuddhananda Bharati

Greatness

Greatness is free from insolence
Littleness swells with that offence.


GU Pope

Greatness

Greatness is absence of conceit; meanness, we deem,
Riding on car of vanity supreme.

Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of)meanness.


Mu. Varadarajan

பெருமைப்‌ பண்பாவது செருக்கு இல்லாமல்‌ வாழ்தல்‌: சிறுமையோ செருக்கே மிகுந்து அதன்‌ எல்லையில்‌ நின்று விடுவதாகும்‌.


Parimelalagar

பெருமை பெருமிதம இன்மை - பெருமைக்குணமாவது காரணமுண்டாய வழியும் அஃது இயல்பாதல் நோக்கித் தருக்கின்றியிருத்தல்; சிறுமை பெருமிதம் ஊர்ந்துவிடல் - சிறுமைக் குணமாவது அஃது இல்வழியும் அதனை ஏற்றுக் கொண்டு தருக்கின் முடிவின்கண்ணே நின்றுவிடுதல்,
விளக்கம்:
('அளவறத் தருக்குதல்' என்பதாயிற்று. 'விடும்' என்று பாடம் ஓதுவாரும் உளர்; முற்றுத்தொடரும் எழுவாய்த் தொடரும் தம்முள் இயையாமையின், அது பாடமன்மை உணர்க.)


Manakkudavar

(இதன் பொருள்) பெருமையாவது செருக்கின்மை ; சிறுமை செருக்கினை மேற் கொண்டொழுகுமாதலான்,
(என்றவாறு). மேல் குலத்தினாலும் பெரியாரைப் பெரியாரென்று கொள்ளல் படாதென் றார் இனிப் பெருமை யிலக்கணங் கூறுவார், முற்படச் செருக்கின்மை பெருமையென்று கூறினார்.