Kural 978
குறள் 978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
paniyumaam yenrum paerumai sirumai
aniyumaam thannai viyandhthu
Shuddhananda Bharati
Greatness bends with modesty
Meanness vaunts with vanity
GU Pope
Greatness humbly bends, but littleness always
Spreads out its plumes, and loads itself with praise.
The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.
Mu. Varadarajan
பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்; ஆனால் சிறுமையோ தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொள்ளும்.
Parimelalagar
பெருமை என்றும் பணியும் - பெருமையுடையார் அச்சிறப்பு உண்டாய ஞான்றும் தருக்கின்றி அமைந்தொழுகுவர்; சிறுமை
விளக்கம்:
(என்றும்) தன்னை வியந்து அணியும்-மற்றைச் சிறுமையுடையார் அஃதில்லாத ஞான்றும் தம்மை வியந்து புனையா நிற்பர்.
விளக்கம்:
(பொருளின் தொழில்கள் பண்பின்மேல் ஏற்றப்படடன. இஃது 'அற்றம் மறைக்கும் பெருமை' (குறள். 980) என்புழியும் ஒக்கும். 'என்றும்' என்பது பின்னும் வந்து இயைந்தது. 'ஆம்' என்பன இரண்டும் அசை. புனைதல் - பிறரின் தமக்கு ஓர் மிகுதியை ஏற்றுக் கோடல். இதற்கு, 'உயர்ந்தார் தாழ்வார்; தாழ்ந்தார் உயர்வார், இஃதொரு விரோதம் இருந்தவாறு என்?' என உலகியலை வியந்து கூறிற்று ஆக்குவாரும் உளர்.)
Manakkudavar
(இதன் பொருள்) பெருமை எக்காலத்தும் பிறரைத் தாழ்ந்தொழுகும்; சிறுமை தன்னைப் பெருக்க நினைத்து அலங்கரிக்கும்,
(என்றவாறு). இது பெருமையாவது பணிந்தொழுகுதலென்று கூறிற்று