குறள் 977

பெருமை

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்

irappae purindhtha tholitrraachiirappundhthaan seeral
seeral lavarkan patin


Shuddhananda Bharati

Greatness

The base with power and opulence
Wax with deeds of insolence.


GU Pope

Greatness

Whene'er distinction lights on some unworthy head,
Then deeds of haughty insolence are bred.

Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride.


Mu. Varadarajan

சிறப்பு நிலையும்‌ தனக்குப்‌ பொருந்தாத சீரற்ற கீழ்‌ மக்களிடம்‌ ஏற்பட்டால்‌, வரம்புமீறிய செயலை உடையதாகும்‌.


Parimelalagar

சிறப்புத் தானும் - தனக்கு ஒக்கும் பெரியாரிடத்து அமைந்திருத்தலைச் செய்வதாய சிறப்புத்தானும்; சீர் அல்லவர்கண் படின் - தனக்கு ஒவ்வாத சிறியாரிடத்துப் படுமாயின். இறப்பே புரிந்த தொழிற்றாம் - அதனை ஒழிந்து தருக்கின் கண்ணே மிக்க செயலை உடைத்தாம்.
விளக்கம்:
(தருக்கினை மிகச் செய்யும் என்பதாயிற்று. சிறப்பு - குடிமை, செல்வம், கல்விகளினாய மிகுதி. இவை இரண்டு பாட்டானும் அஃதிலார் செய்தி கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) செல்வமான து தனக்கு நிகரில்லாதார்மாட்டே நிற்குமாயின், நிதியை இறப்பாரிடத்தே பொருந்தின் தொழிலை உடைத்தால்,
(என்றவாறு). சீரல்லவர் - பெரியரல்லர்.