குறள் 976

பெருமை

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு

siriyaar unarchiyul illai paeriyaaraip
paenikkol vaemyennum nokku


Shuddhananda Bharati

Greatness

The petty-natured ones have not
The mind to seek and befriend the great.


GU Pope

Greatness

‘As votaries of the truly great we will ourselves enroll,’
Is thought that enters not the mind of men of little soul.

It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.


Mu. Varadarajan

பெரியோரை விரும்பிப்‌ போற்றுவோம்‌ என்னும்‌ உயர்ந்த நோக்கம்‌, அவருடைய சிறப்பை உணராத சிறியோரின்‌ உணர்ச்சியில்‌ இல்லை.


Parimelalagar

பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு - அப் பெற்றியராய பெரியாரை வழிபட்டு அவர் இயல்பினையாம் கோடும் என்னும் கரத்து; சிறியார் உணர்ச்சியுள் இல்லை - மற்றைச் சிறியராயினார் மனத்தின்கண் உளதாகாது.
விளக்கம்:
(குடிமை, செல்வம், கல்வி என்று இவற்றது உண்மை மாத்திரத்தால் தம்மை வியந்திருப்பார்க்கு, அவை தமக்கு இயல்பு என்று அமைந்திருப்பாரை வழிபட்டு, அஃது உடையராதல் கூடாது என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) சிறுமையுடையார் உணர்வின்கண் இல்லை, பெருமையுடை யாரைப் போற்றித் துணையாகக் கொள்வேமென்னும் கருத்து,
(என்றவாறு). இது பெரியாரைப் பெறுதலும் பெருமையென்று கூறிற்று.