குறள் 975

பெருமை

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்

paerumai yutaiyavar aatrruvaar aatrrin
arumai utaiya seyal


Shuddhananda Bharati

Greatness

Great souls when their will is active
Do mighty deeds rare to achieve.


GU Pope

Greatness

The man endowed with greatness true,
Rare deeds in perfect wise will do.

(Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do).


Mu. Varadarajan

பெருமைப்பண்பு உடையவர்‌ செய்வதற்கு அருமையான செயலைச்‌ செய்வதற்கு உரிய நெறியில்‌ செய்து முடிக்க வல்லவர்‌ ஆவர்‌.


Parimelalagar

பெருமை உடையவர் - அவ்வாற்றால் பெருமையுடையராயினார்; அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார் - தாம் வறியராய வழியும் பிறரால் செய்தற்கு அரியவாய தம் செயல்களை விடாது அவை செய்யும் நெறியால் கடைபோகச் செய்தலை வல்லராவர்.
விளக்கம்:
('வறியராய வழியும்' என்பது முன் செய்து போந்தமை தோன்றப் 'பெருமை' உடையவர் என்றதனானும், 'ஆற்றுவார்' என்றதனானும் பெற்றாம். இதனால் அதனை உடையார் செய்தி கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பெருமையுடையவர் நெறியினானே செய்ய வல்லர் ; செய்தற்கு அருமையுடைய செயல்களை,
(என்றவாறு). இது செய்தற்கு அரிய செய்வார் பெரியரென்றது.