Kural 974
குறள் 974
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு
orumai makalirae polap paerumaiyum
thannaiththaan kondolukin undu
Shuddhananda Bharati
Greatness like woman's chastity
Is guarded by self-varacity.
GU Pope
Like single-hearted women, greatness too,
Exists while to itself is true.
Even greatness, like a woman's chastity, belongs only to him who guards himself.
Mu. Varadarajan
ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப் போல், பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.
Parimelalagar
ஒருமை மகளிரே போல - கவராத மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத்தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போல; பெருமையும் தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு - பெருமைக்குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக்கொண்டு ஒழுகுவானாயின் அவன்கண் உண்டாம்.
விளக்கம்:
(பொருளின் தொழில், உவமையினும் வந்தது. கற்புண்டாதல் தோன்ற நின்றமையின், உம்மை எச்ச உம்மை. ஒழுகுதல் - மனம் மொழி மெய்களை ஒடுக்கி, ஒப்புரவு முதலிய செய்து போதல். இதனால், அஃது உளதாமாறு கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) கவரா மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம் மைத் தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போல, பெருமைக் குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத் தான் காத்துக்கொண்டொழுகுவானாயின், அவன்கண் உண்டாம்,
(என்றவாறு).