குறள் 973

பெருமை

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்

maelirundhthum maelallaar maelallar keelirundhthum
keelallaar keelal lavar


Shuddhananda Bharati

Greatness

Ignoble high not high they are
The noble low not low they fare.


GU Pope

Greatness

The men of lofty line, whose souls are mean, are never great
The men of lowly birth, when high of soul, are not of low estate.

Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.


Mu. Varadarajan

மேல்நிலையில்‌ இருந்தாலும்‌ மேன்மைப்‌ பண்பு இல்லாதவர்‌ மேலானவர்‌ அல்லர்‌; கீழ்நிலையில்‌ இருந்தாலும்‌ இழிகுணம்‌ இல்லாதவர்‌ கீழ்மக்கள்‌ அல்லர்‌.


Parimelalagar

மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார்; கீழல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லர் - அவை செய்து பெரியராயினார், தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும் சிறியராகார்.
விளக்கம்:
(மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமைமாத்திரத்தானும் செல்வமாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) மேலான இடத்திருந்தாலும், மேன்பையில்லாதார் மேன்மக்களா கார்; கீழான இடத்திருந்தாலும், கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார்,
(என்றவாறு). இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம்.