Kural 97
குறள் 97
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்
nayaneenru nanri payakkum payaneenru
panpin thalaippiriyaach sol
Shuddhananda Bharati
The fruitful courteous kindly words
Lead to goodness and graceful deeds.
GU Pope
The Utterance of Pleasant Words
The words of sterling sense, to rule of right that strict adhere,
To virtuous action prompting, blessings yield in every sphere.
That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).
Mu. Varadarajan
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
Parimelalagar
நயன் ஈன்று நன்றி பயக்கும் ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்; பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்-பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல் நீதி. உலகத்தோடு பொருந்துதல்.
விளக்கம்:
('பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல்-ஒரு சொல் நீர்மைத்து.)
Manakkudavar
(இதன் பொருள்) பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து அறத்தினையும் பயக்கும் ; குணத்தினின்று நீங்காத சொல், (எ - று.)