குறள் 947

மருந்து

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்

theeyala vanrith thaeriyaan paerithunnin
noyala vinrip padum


Shuddhananda Bharati

Medicine

who glut beyond the hunger's fire
Suffer from untold diseases here.


GU Pope

Medicine

Who largely feeds, nor measure of the fire within maintains,
That thoughtless man shall feel unmeasured pains.

He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).


Mu. Varadarajan

பசித்தியின்‌ அளவின்படி அல்லாமல்‌, அதை ஆராயாமல்‌ மிகுதியாக உண்டால்‌, அதனால்‌ நோய்கள்‌ அளவில்லாமல்‌ ஏற்பட்டுவிடும்‌.


Parimelalagar

தெரியான் தீ அளவு அன்றிப் பெரிது உண்ணின் - தன் பகுதியும் அதற்கு ஏற்ற உணவும் காலமும் ஆராயாது, வேண்டியதோர் உணவை வேண்டியதோர் காலத்து, வயிற்றுத் தீ அளவின்றி ஒருவன் மிக உண்ணுமாயின்; நோய் அளவு இன்றிப் படும் - அவன் மாட்டு நோய்கள் எல்லையற வளரும்.
விளக்கம்:
(தெரியாமை வினைக்குச் செயப்படு பொருள்கள் அதிகாரத்தான் வந்தன. நோய் - சாதியொருமை. இவை இரண்டு பாட்டானும் அவ்வகை உண்ணாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பசியின் அளவன்றி ஆராயாதே மிகவுண்பானாயின், மிகநோய் உண்டாம், (எ - று. இது நோய் தீர்ந்தாலும் பசியளவு அறியாதே உண்பானாயின், மீண்டும் நோயா மாதலான், அளவறிந்து உண்ணல் வேண்டுமென்றது. துன்பவியல் முற்றிற்று.