குறள் 944

மருந்து

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து

atrrathu arindhthu kataippitiththu maaralla
maaralla thuikka thuvarachiasiththu


Shuddhananda Bharati

Medicine

Know digestion; with keen appetite
Eat what is suitable and right.


GU Pope

Medicine

Knowing the food digested well, when hunger prompteth thee,
With constant care, the viands choose that well agree.

(First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry,whatever is not disagreeable (to you).


Mu. Varadarajan

முன்‌ உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக்‌ கடைபிடித்து, அவற்றையும்‌ நன்றாகப்‌ பசித்தபிறகு உண்ணவேண்டும்‌.


Parimelalagar

அற்றது அறிந்து - முன்னுண்டது அற்றபடியை யறிந்து; துவரப் பசித்து - பின் மிகப்பசித்து; மாறல்ல கடைப் பிடித்துத் துய்க்க - உண்ணுங்கால் மாறு கொள்ளாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்க.
விளக்கம்:
(அற்றது அறிந்த என்னும் பெயத்துரை அதனை யாப்புறுத்தற் பொருட்டு. உண்டது அற்றாலும் அதன் பயனாகிய இரதம் அறாதாகலான், அதுவும் அறல் வேண்டும் என்பார், 'மிகப் பசித்து' என்றார். பசித்தால் வினை ஈண்டு உடையான்மேல் நின்றது. மாறு கொள்ளாமையாவது உண்பான் பகுதியோடு மாறு கொள்ளாமையும், கால இயல்போடு மாறுகொள்ளாமையும், சுவை வீரியங்களால் தம்முள் மாறுகொள்ளாமையும் ஆம். அவையாவன, முறையே வாதபித்த ஐயங்களானாய பகுதிகட்கு அடாதவற்றைச் செய்வனவாதலும், பெரும்பொழுது சிறுபொழுது என்னும் காலவேறுபாடுகளுள் ஒன்றற்காவன பிறிதொன்றற்கு ஆகாமையும், தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வனவும் ஆம். அவற்றைக் குறிக்கொள்ளாது மனம் பட்டவாற்றால் துய்ப்பின், அதனானே நோயும் மரணமும் வருதலின், 'கடைப்பிடித்து' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) முன்பு உண்டவுணவு அற்றதனை அறிந்து, பின்பு அறுமளவும் கடைப்பிடித்து, உண்ணுங்கால் ஒன்றினோடொன்று மாறுகொள்ளாத உண வினை மிகவும் பசித்து உண்க, (எ – று). மாறுகோடலாவது நெய்யும் தேனும் இனிய வாயினும் தம்மிலள வொக்குமா யின் கொல்லும்; அது போல்வதாம். இஃது உண்ணுங்கால் அளவறிந்துண்ணலே யன்றி மாறல்லவும் உண்ண வேண்டு மென்றது.