குறள் 943

மருந்து

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு

atrraal aravarindhthu unka akhthudampu
paetrraan naetithuikkum aaru


Shuddhananda Bharati

Medicine

Eat food to digestive measure
Life in body lasts with pleasure.


GU Pope

Medicine

Who has a body gained may long the gift retain,
If, food digested well, in measure due he eat again.

If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.


Mu. Varadarajan

முன்‌ உண்ட உணவு செரித்துவிட்டால்‌, பின்‌ வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும்‌; அதுவே உடம்பு பெற்றவன்‌ அதை நெடுங்காலம்‌ செலுத்தும்‌ வழியாகும்‌.


Parimelalagar

அற்றால் அளவு அறிந்து உண்க= முன் உண்டது அற்றால் பின் உண்பதனை அறும் அளவறிந்து அவ்வளவிற்றாக உண்க; உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு அஃது= இறப்பவும் பலவாய பிறயாக்கைகளிற் பிழைத்துப் பெறற்கு அரிய இம்மானுட யாக்கையைப பெற்றான், அதனை நெடுங்காலம் கொண்டுசெலுத்து நெறி அதுவாகாலான்.
விளக்கம்:
இம்மை மறுமை வீடுபேறுகள் எய்தற்பாலது ஈதொன்றுமேயாகலின், 'உடம்பு பெற்றான்' என்றும், அது நெடிது நின்றுழி அவை பெருகச் செய்துகொள்ளலாம் ஆகலின் 'நெடிது உய்க்குமாறு' என்றும் கூறினார். பெற்றால் என்று பாடம்ஓதுவாரும் உளர்.


Manakkudavar

(இதன் பொருள்) முன்பு உண்டது அற்றால், பின்பு உண்ணுங்கால் இத்துணை யறு மென்று தான் அறிந்து உண்க ; அஃது உடம்பு பெற்றவன் அதனை நெடுங் காலம் செலுத்துதற்குரிய வழி,
(என்றவாறு).