குறள் 942

மருந்து

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்

marundhthaena vaentaavaam yaakkaikku arundhthiyathu
atrrathu potrri unin


Shuddhananda Bharati

Medicine

After digestion one who feeds
His body no medicine needs.


GU Pope

Medicine

No need of medicine to heal your body's pain,
If, what you ate before digested well, you eat again.

No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.


Mu. Varadarajan

முன்‌ உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப்‌ பிறகு தக்க அளவு உண்டால்‌, உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.


Parimelalagar

அருந்தியது அற்றது போற்றி உணின் - ஒருவன் முன்னுண்டது அற்றபடியைக் குறிகளால் தெளிய அறிந்த பின் உண்ணுமாயின்; யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம் - அவன் யாக்கைக்கு மருந்து என்று வேறு வேண்டாவாம்.
விளக்கம்:
(குறிகளாவன-யாக்கை நொய்ம்மை, தேக்கின்தூய்மை, காரணங்கள் தொழிற்குரியவாதல், பசி மிகுதல் என இவை முதலாயின. பிணிகள் யாக்கையவாகலின், 'யாக்கைக்கு' என்றார். 'உணின்' என்பது அதன் அருமைதோன்ற நின்றது.)


Manakkudavar

(இதன் பொருள்) யாக்கைக்கு மருந்தென்பதொன்று வேண்டா ; குற்றமற முற் காலத்து அருந்திய உணவு அற்றமையறிந்து பாதுகாத்து உண்பனாயின், (எ-று). இஃது இவ்வாறு செய்யின் மருந்து தேட வேண்டாமென்றது.