குறள் 940

சூது

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்

ilaththorooum kaathalikkum koothaepol thunpam
ulaththorooum kaathatrru uyir


Shuddhananda Bharati

Gambling

Love for game grows with every loss
As love for life with sorrows grows.


GU Pope

Gaming (Gambling)

Howe'er he lose, the gambler's heart is ever in the play;
E'en so the soul, despite its griefs, would live on earth alway.

As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it.


Mu. Varadarajan

பொருள்‌ வைத்து இழக்க இழக்க மேன்மேலும்‌ விருப்பத்தை வளர்க்கும்‌ சூதாட்டம்போல்‌, உடல்‌ துன்பப்பட்டு வருந்த வருந்த உயிர்‌ மேன்மேலும்‌ காதல்‌ உடையதாகும்‌.


Parimelalagar

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல்-சூதாடலான் இருமைப் பயன்களையும் இழக்குந்தோறும் அதன்மேற் காதல் செய்யும் சூதன் போல; துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர் - உடம்பான் மூவகைத் துன்பங்களையும் அனுபவிக்குந் தோறும் அதன்மேற் காதலை உடைத்து உயிர்.
விளக்கம்:
(சூது - ஆகுபெயர். உயிரினது அறியாமை கூறுவார் போன்று சூதனது அறியாமை கூறுதல் கருத்தாகலின், அதனை யாப்புறுத்தற் பொருட்டு உவம மாக்கிக் கூறினார். இதன் எதிர்மறை முகத்தால், சூதினை வெறுத்து ஒழிவானை யொக்கும் உடம்பினை வெறுத்தொழியும் உயிர் எனவும் கொள்க. இதனான் இஃது ஒழிதற்கு அருமையும், ஒழிந்தாரது பெருமையும கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) பொருளை இழக்குந்தோறும் பொருளைக் காதலிக்கும் சூது போல, துன்பத்தை உழக்குந்தோறும் இன்பத்திலே காதலுடைத்து உயிர்; இவை இரண்டினுக்கும் அஃதியல்பு,
(என்றவாறு).