Kural 939
குறள் 939
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்
utaiselvam oonoli kalviyenru aindhthum
ataiyaavaam aayang kolin
Shuddhananda Bharati
Dress, wealth, food, fame, learning-these five
In gambler's hand will never thrive.
GU Pope
Clothes, wealth, food, praise, and learning, all depart
From him on gambler's gain who sets his heart.
The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning.
Mu. Varadarajan
சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.
Parimelalagar
ஆயம் கொளின்-அரசன் சூதினைத் தனக்கு வினோதத் தொழிலாக விரும்புமாயின்; ஒளி கல்வி செல்வம் ஊண் உடை என்று ஐந்தும்; அடையாவாம்-அவனை ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்று இவ்வைந்தும் சாராவாம்.
விளக்கம்:
(ஆயம்: ஆகுபெயர். இச்சிறப்புமுறை செய்யுள் நோக்கிப் பிறழ நின்றது. செல்வம்-அறுவகை உறுப்புக்கள். ஊண் உடை என்பனவற்றால் துப்புரவுகளெல்லாம் கொள்ளப்படும். காலமும் கருத்தும் பெறாமையின், இவை உளவாகா என்பதாம். இவை நான்கு பாட்டானும் சிறுமை பல செய்து அவற்றான் இருமையும் கெடுதல் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) உடையும், செல்வமும், உணவும், புகழும், கல்வியுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சூதினைக் கொள்ளின், சாராவாம்,
(என்றவாறு). செல்வம் - பொன்னும், மனையும், பூமியும், அடிமையு முதலாயின