Kural 94
குறள் 94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
thunpurooum thuvvaamai illaakum yaarmaatdum
inpurooum inso lavarkku
Shuddhananda Bharati
Whose loving words delight each one
The woe of want from them is gone.
GU Pope
The Utterance of Pleasant Words
The men of pleasant speech that gladness breathe around,
Through indigence shall never sorrow's prey be found.
Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.
Mu. Varadarajan
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
Parimelalagar
யார்மட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு-எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும்-துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம்.
விளக்கம்:
(நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' எனப்பட்டுது. 'யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பே ஆம். ஆகவே, அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.)
Manakkudavar
(இதன் பொருள்) துன்பமுறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும்; யாவர்மாட்டுங் கூறு மின்பமுறுவிக்கின்ற இனிய சொல்லை யுடையார்க்கு, (எ-று).