Kural 934
குறள் 934
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்
sirumai palaseithu seeralikkum koothin
varumai tharuvathonru il
Shuddhananda Bharati
Nothing will make you poor like game
Which adds to woes and ruins fame.
GU Pope
Gaming brings many woes, and ruins fair renown;
Nothing to want brings men so surely down.
There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation.
Mu. Varadarajan
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
Parimelalagar
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் - தன்னை விழைந்தார்க்கு முன்இல்லாத துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ள புகழையும் கெடுக்கும் சூதுபோல; வறுமை தருவது ஒன்று இல் - நல்குரவினைக் கொடுக்க வல்லது பிறிதொன்று இல்லை.
விளக்கம்:
(அத்துன்பங்கள் முன்னர்க் கூறுப. நல்வினைகளையும நல்லினத்தையும் நீக்கித் தீவினைகளையும் தீயினத்தையும் கூட்டுதலால், 'சீர் அழிக்கும்' என்றார். வறுமைக்கு எல்லையாவர் என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) துன்பமாயின பலவற்றையுஞ் செய்து தலைமையையழிக்கும் சூது போல், வறுமையைத் தருவது பிறிதொன்று இல்லை,
(என்றவாறு)