குறள் 933

சூது

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்

urulaayam oavaathu koorin porulaayam
pooip puramae padum


Shuddhananda Bharati

Gambling

If kings indulge in casting dice
All their fortune will flow to foes.


GU Pope

Gaming (Gambling)

If prince unceasing speak of nought but play,
Treasure and revenue will pass from him away.

If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other's hands.


Mu. Varadarajan

ஒருவன்‌ உருளுகின்ற கருவியால்‌ வரும்‌ பொருளை இடைவிடாமல்‌ கூறிச்‌ சூதாடினால்‌, பொருள்‌ வருவாய்‌ அவளைவிட்டு நீங்கிப்‌ பகைவரிடத்தில்‌ சேரும்‌


Parimelalagar

உருள் ஆயம் ஓவாது கூறின் - உருளும் கவற்றின்கண் பட்ட ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின்; பொருள் ஆயம் போஒய்ப் புறமே படும் - அரசன் ஈட்டிய பொருளும் அவன் பொருள் வருவாயும் அவனை விட்டுப் போய்ப் பகைவர் கண்ணே தங்கும்.
விளக்கம்:
(கவற்றினது உருட்சியை அதனினாய ஆயத்தின்மேல் ஏற்றியும், சூதாடலை அது கூறலாகிய காரணத்தின்மேலிட்டும் கூறினார். பொருளாயம் என்பது உம்மைத் தொகை. ஆயம்-வடமொழித் திரிசொல். காத்தற்கண்ணும் இயற்றற் கண்ணும் கருத்திலனாகலின், அவை இரண்டும் பகைவர்பாற் செல்லும் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) புரளும் கவற்றை இடைவிடாது எக்காலத்தும் கூறுவனாயின், பொருள் வரவு தன்னை விட்டுப் போய்ப் பிறர்பாற் செல்லும்,
(என்றவாறு). 4