குறள் 930

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு

kallunnaap polthitr kaliththaanaik kaanungkaal
ullaankol undathan chorvu


Shuddhananda Bharati

Not drinking liquor

The sober seeing the drunkard's plight
On selves can't they feel same effect?


GU Pope

Not Drinking Palm-Wine

When one, in sober interval, a drunken man espies,
Does he not think, 'Such is my folly in my revelries'?

When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink.


Mu. Varadarajan

ஒருவன்‌ தான்‌ கள்‌ உண்ணாதபோது கள்ளுண்டு மயங்கினவனைக்‌ காணுமிடத்தில்‌ உண்டு மயங்குவதால்‌ வரும்‌ சோர்வை நினைக்கமாட்டானோ?


Parimelalagar

கண் உண்ணாப் போழ்தில் களித்தானை-கள் உண்பானொருவன் தான் அஃது உண்ணாது தெளிந்திருந்தபொழுதின் கண் உண்டுகளித்த பிறனைக் காணுமன்றே; காணுங்கால் உண்டதன் சோர்வு உள்ளான் கொல்-காணுங்கால் தான் உண்டபொழுது உளதாம் சோர்வினை அவன் சோர்வால் அதுவும் இற்றென்று கருதான் போலும்!
விளக்கம்:
(சோர்வு-மனமொழி மெய்கள் தன் வயத்த அல்லவாதல். கருதல் அளவையான் அதன் இழுக்கினை உய்த்துணரின் ஒழியும் என இதனால் அஃது ஒழிதற் காரணம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தான் கள்ளுண்ணாதபோது கள்ளுண்டு களித்தவனைக் கண்ட விடத்து, தான் கள்ளுண்ட போழ்து தனக்குள்ளதாகுஞ் சோர்வினை நினையான் போலும்; நினைப்பனாயின், தவிரும்,
(என்றவாறு).