Kural 890
குறள் 890
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று
udampaadu ilaathavar vaalkkai kudangkarul
paampodu udanuraindh thatrru
Shuddhananda Bharati
Dwell with traitors that hate in heart
Is dwelling with snake in selfsame hut.
GU Pope
Domestic life with those who don't agree,
Is dwelling in a shed with snake for company.
Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.
Mu. Varadarajan
அகத்தின் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.
Parimelalagar
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை-மனப் பொருத்தம் இல்லாதாரோடு கூட ஒருவன் வாழும் வாழ்க்கை; குடங்கருள் பாம்பொடு உடன் உறைந்தற்று - ஒரு குடிலுள்ளே பாம்போடு கூட உறைந்தாற் போலும்.
விளக்கம்:
('குடங்கம்' என்னும் வடசொல் திரிந்து நின்றது. இடச்சிறுமையானும் பயிற்சியானும் பாம்பாற் கோட்படல் ஒருதலையாம்; ஆகவே, அவ்வுவமையால் அவ்வுயிர்க்கு இறுதி வருதல் ஒருதலை என்பது பெற்றாம். [இதனான், கண்ணோடாதவரைக் கடிக என்பது கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) மனத்தினால் பொருத்தமில்லாதாரோடு ஒத்து வாழும் வாழ்க்கை , ஒரு குடிலகத்தே பாம்போடு கூடி வாழ்ந்தாற் போலும்,
(என்றவாறு). இது பாம்பு இடம் வந்தால் கடிக்கும்; அதுபோல, உட்பகைவர் இடம் வந் தால் கொல்லுவரென்றது.