Kural 889
குறள் 889
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு
yetpaka vachi sirumaiththae aayinum
utpakai ullathaang kaedu
Shuddhananda Bharati
Ruin lurks in enmity
As slit in sesame though it be.
GU Pope
Though slight as shred of 'seasame' seed it be,
Destruction lurks in hidden enmity.
Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destructiond well in it.
Mu. Varadarajan
எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.
Parimelalagar
உட்பகை எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் - அரசனது உட்பகை அவன் பெருமையை நோக்க எள்ளின் பிளவை ஒத்த சிறுமை உடைத்தேயாயினும்; கேடு உள்ளதாம் - பெருமையெல்லாம் அழிய வரும் கேடு அதன் அகத்ததாம்.
விளக்கம்:
(எத்துணையும் பெரிதாய கேடு, தனக்கு எல்லை வருந்துணையும் எத்துணையும் சிறிதாய உட்பகையுள்ளே அடங்கியிருந்து, வந்தால் வெளிப்பட்டு நிற்கும் என்பதாம். இதனான் அது, சிறிது என்று இகழப்படாது என்பது கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) எள்ளின் பிளவு போன்ற சிறுமைத்தேயாயினும், உடனே வாழும் பகையினான் ஒருவர்க்குக் கேடு உள்ளதாம்,
(என்றவாறு). இது பகை சிறிதென் றிகழற்க வென்றது.