குறள் 887

உட்பகை

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி

seppin punarchipol kootinum kootaathae
utpakai utrra kuti


Shuddhananda Bharati

Secret foe

A house hiding hostiles in core
Just seems on like the lid in jar.


GU Pope

Enmity within

As casket with its cover, though in one they live alway,
No union to the house where hate concealed hath sway.

Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid.


Mu. Varadarajan

செப்பின்‌ இணைப்பைப்போல்‌ புறத்தே பொருந்தி இருந்தாலும்‌, உட்பகை உண்டான குடியில்‌ உள்ளவர்‌ அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்‌.


Parimelalagar

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் - செப்பினது புணர்ச்சி போலப் புறத்து வேற்றுமை தெரியாமற் கூடினாராயினும்; உட்பகை உற்ற குடி கூடாது - உட்பகை உண்டாகிய குடியிலுள்ளோர் அகத்துத் தம்முள் கூடார்.
விளக்கம்:
(செப்பின் புணர்ச்சி - செப்பு மூடியோடு புணர்ந்த புணர்ச்சி. உட்பகையான் மனம் வேறுபட்டமையின், புறப்பகை பெற்றுழி வீற்றுவீற்றாவர் என்பதாம். குடி கூடாது என்பதனை, நாடுவந்தது என்பது போலக் கொள்க. உட்பகை தான் உற்ற குடியோடு கூடாது என்றும் உட்பகை உண்டாய குடி அப்பகையோடு கூடாது என்றும் உரைபாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) உட்பகையும் அஃது உற்ற குடியும், செப்பும் மூடியும் பொருந்தி னாற்போலப் பொருந்தினவாயினும், பொருத்தமில்லவாம்,
(என்றவாறு). உட்பகையுற்றார் செப்பும் மூடியும் ஒன்று பட்டாற்போல இருந்து, செப்பகத் துப் பொருள் வாங்குவார்க்கு மூடி துணையாய் அகன்று நிற்குமதுபோல அகன்று நிற்பரென்றவாறு.