Kural 886
குறள் 886
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது
onraamai onriyaar katpatin yenjgnyaanrum
ponraamai onral arithu
Shuddhananda Bharati
Discord in kings' circle entails
Life-destroying deadly evils.
GU Pope
If discord finds a place midst those who dwelt at one before,
'Tis ever hard to keep destruction from the door.
If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.
Mu. Varadarajan
ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.
Parimelalagar
ஒன்றாமை ஒன்றியார்கண் படின் - பகைமை, தனக்கு உள்ளாயினார் மாட்டே பிறக்குமாயின்; பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது - அரசனுக்கு இறவாமை கூடுதல் எஞ்ஞான்றும் அரிது.
விளக்கம்:
(பொருள் படை முதலிய உறுப்புகளாற் பெரியனாய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். இவை நான்கு பாட்டானும், அதனால் தனக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) தன் ஒன்றினார்மாட்டு ஒன்றாமை உள் தாயின், எந்நாளினும் சாவாமையைக் கூடுதல் அரிது,
(என்றவாறு) இது நட்டோராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.