குறள் 885

உட்பகை

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்

uralmuraiyaan utpakai thonrin iralmuraiyaan
yaetham palavum tharum


Shuddhananda Bharati

Secret foe

A traitor among kinsmen will
Bring life-endangering evil.


GU Pope

Enmity within

Amid one's relatives if hidden hath arise,
‘Twill hurt inflict in deadly wise.

If there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crime.


Mu. Varadarajan

உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால்‌, அது ஒருவனுக்கு இறக்கும்‌ வகையான குற்றம்‌ பலவற்றையும்‌ கொடுக்கும்‌.


Parimelalagar

உறல் முறையான் உட்பகை தோன்றின் - புறத்து உறவு முறைத் தன்மையோடு கூடிய உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இறல் முறையான் ஏதம் பலவும் தரும் - அஃது அவனுக்கு இறத்தல் முறையோடு கூடிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.
விளக்கம்:
(அவை, புறப்பகைத் துணையாய் நின்றே அது தோன்றாமல் கோறல் முதலிய வஞ்சனை செய்தலும், அமைச்சர் முதலிய உறுப்புகளைத் தேய்த்தலும் முதலாயின.)


Manakkudavar

(இதன் பொருள்) உறவு முறையோடே உட்பகை தோன்றுமாயின், அது கெடுதல் முறைமையோடே கூடப் பல துன்பத்தினையும் தரும்,
(என்றவாறு). இது சுற்றத்தாராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.