குறள் 883

உட்பகை

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்

utpakai achiththatr kaakka ulaividaththu
matpakaiyin maanath thaerum


Shuddhananda Bharati

Secret foe

The secret foe in days evil
Will cut you, beware, like potters' steel.


GU Pope

Enmity within

Of hidden hate beware, and guard thy life;
In troublous time ‘twill deeper wound than potter's knife.

Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's clay.


Mu. Varadarajan

உட்பகைக்கு அஞ்சி ஒருவன்‌ தன்னைக்‌ காத்துக்‌ கொள்ள வேண்டும்‌; தளர்ச்சி வந்தபோது மட்கலத்தை அறுக்கும்‌ கருவிபோல்‌ அந்த உட்பகை தவறாமல்‌ அழிவு செய்யும்‌.


Parimelalagar

உட்பகை அஞ்சித் தற்காக்க - உட்பகையாயினாரை அஞ்சித் தன்னைக் காத்துக்கொண் டொழுகுக; உலைவிடத்து மட்பகையின் மாணத்தெறும் - அங்ஙனம் ஒழுகாதவழித் தனக்கோர் தளர்ச்சி வந்தவிடத்துக் குயவன் மட்கலத்தை அறுக்கும் கருவி போல, அவர் தப்பாமற் கெடுப்பர்.
விளக்கம்:
('காத்தல்' அவர் அணையாமலும் அவர்க்கு உடம்படாமலும் பரிகரித்தல். மண்ணைப் பகுக்கும் கருவி 'மட்பகை' எனப்பட்டது. பகைமை தோன்றாமல் உள்ளாயிருந்தே கீழறுத்தலின், கெடுதல் தப்பாது என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) உட்னே வாழும் பகைவரை அஞ்சித் தன்னைக் காக்க; அவர் தனக்குத் தளர்ச்சி வந்தவிடத்து, குயவன் கலத்தை அறுக்குங் கருவி போலத் தப்பாமல் கொல்லுவர்,
(என்றவாறு). மட்பகை தான் அறுக்குங்கால் பிறரறியாமல் நின்று அறுக்கும்.