குறள் 882

உட்பகை

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு

vaalpola pakaivarai anjchatrka anjsuka
kaelpol pakaivar thodarpu


Shuddhananda Bharati

Secret foe

You need not sword-like kinsmen fear
Fear foes who feign as kinsmen dear.


GU Pope

Enmity within

Dread not the foes that as drawn swords appear;
Friendship of foes, who seem like kinsmen, fear!

Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly act) like relations.


Mu. Varadarajan

வாளைப்போல்‌ வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை; ஆனால்‌ உறவினரைப்போல இருந்து உட்பகை கொண்டவரின்‌ தொடர்புக்கு அஞ்ச வேண்டும்‌.


Parimelalagar

வாள் போல் பகைவரை அஞ்சற்க - வாள்போல எறிதும் என்று வெளிப்பட்டு நிற்கும் பகைவர் பகையினை அஞ்சாதொழிக; கேள் போல் பகைவர் தொடர்பு அஞ்சுக - அங்ஙனம் நில்லாது கேள்போல மறைந்து நிற்கும் பகைவர் நட்பினை அஞ்சுக.
விளக்கம்:
(பகைவர்: ஆகுபெயர். முன்னே அறிந்து காக்கப்படுதலான், 'அஞ்சற்க' என்றும், அங்ஙனம் அறியவும் காக்கவும் படாமையின் கெடுதல் ஒருதலை என்பது பற்றி 'அஞ்சுக' என்றும் கூறினார். பின் செய்யும் பகையினும் கொடிதாகலானும் காக்கலாகாது ஆகலானும், அஞ்சப்படுவது முன் செய்த அவர் தொடர்பாயிற்று. இவை இரண்டு பாட்டானும் உட்பகை ஆகாது என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) வாள் போலக் கொல்லுந் திறலுடைய பகைவரை அஞ்சாதொழிக; புறம்பு நட்டாரைப் போல மனத்தினாற் பகைத்திருப்பார் தொடர்பை அஞ்சுக. இது பகை அஞ்சுவதினும் மிக அஞ்ச வேண்டுமென்றது.