குறள் 879

பகைத்திறந்தெரிதல்

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து

ilaithaaka mulmaram kolka kalaiyunar
kaikollum kaalththa idaththu


Shuddhananda Bharati

Appraising enemies

Cut off thorn-trees when young they are;
Grown hard, they cut your hands beware.


GU Pope

Knowing the Quality of Hate

Destroy the thorn, while tender point can work thee no offence;
Matured by time, ‘twill pierce the hand that plucks it thence.

A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.


Mu. Varadarajan

முள்மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும்‌; காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது வெட்டுகின்றவரின்‌ கையையே அது வருத்தும்‌.


Parimelalagar

முள் மரம் இளைதாகக் கொல்க - களைய வேண்டுவதாய முள் மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக; காழ்த்த இடத்துக் களையுநர் கை கொல்லும் - அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும்.
விளக்கம்:
('களையப்படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக; அன்றியே, வலிதாய காலத்துக் களையலுறின், தம்மை அதுதான் களையும்' என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல். இதனான் களையும் பருவம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) முள்மரத்தை இளைதாகவே களைக; முற்றினவிடத்து, தன்னைக் களைவார் கையைக் கொல்லுமாதலால்,
(என்றவாறு). இது பகைவர் வலியராவதன்முன்னே களைதல் வேண்டு மென்றது.