குறள் 878

பகைத்திறந்தெரிதல்

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு

vakaiyarindhthu thatrseithu thatrkaappa maayum
pakaivarkan patda serukku


Shuddhananda Bharati

Appraising enemies

Know how and act and defend well
The pride of enemies shall fall.


GU Pope

Knowing the Quality of Hate

Know thou the way, then do thy part, thyself defend;
Thus shall the pride of those that hate thee have an end.

The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.


Mu. Varadarajan

செய்யும்‌ வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக்‌ கொண்டு தற்காப்புத்‌ தேடிக்கொண்டால்‌, பகைவரிடத்தில்‌ ஏற்பட்ட செருக்குத்‌ தானாகவே அழியும்.


Parimelalagar

வகை அறிந்து தற் செய்து தற் காப்ப - தான் வினை செய்யும் வகையை அறிந்து அது முடித்தற்கு ஏற்பத் தன்னைப் பெருக்கி மறவி புகாமல் தன்னைக் காக்கவே; பகைவர்கண் பட்ட செருக்கு மாயும் - தன் பகைவர் மாட்டு உளதாய களிப்புக் கெடும்.
விளக்கம்:
(வகை - வலியனாய்த் தான் எதிரே பொருமாறும், மெலியனாய் அளவில் போல் விலக்குமாறும் முதலாயின. பெருக்கல் - பொருள் படைகளாற் பெருகச் செய்தல். களிப்பு - 'இவற்றான் வேறும்' என்று எண்ணி மகிழ்ந்திருத்தல். இவ்விறுகுதல் அறிந்து தாமே அடங்குவர் என்பதாம். இதனால் களைதற்பால தன்கண் செய்வன கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) வினை செய்யும் வகையை யறிந்து, தன்னைப் பெருக்கி, தான் தன்னைக் காக்க, பகைவர் மாட்டு உண்டான பெருமிதம் கெடும்,
(என்றவாறு). இது பகைவரைக் கொல்லுந் திறங் கூறிற்று