குறள் 877

பகைத்திறந்தெரிதல்

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து

novatrka nondhthathu ariyaarkku maevatrka
maenmai pakaivar akaththu


Shuddhananda Bharati

Appraising enemies

To those who know not, tell not your pain
Nor your weakness to foes explain.


GU Pope

Knowing the Quality of Hate

To those who know them not, complain not of your woes;
Nor to your foeman's eyes infirmities disclose.

Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes.


Mu. Varadarajan

துன்புற்றதைத்‌ தாமாகவே அறியாத நண்பர்க்குத்‌ துன்பத்தைச்‌ சொல்லக்‌ கூடாது; பகைவரிடத்தில்‌ மென்மை மேற்கொள்ளக்கூடாது.


Parimelalagar

நொந்தது அறியார்க்கு நோவற்க - நொந்தனைத் தாமாக அறியாத நட்டார்க்குத் தன் நோவு சொல்லற்க: மென்மை பகைவர் அகத்து மேவற்க - வலியின்மை பார்த்திருக்கும் பகைவர் மாட்டு அவ்வலியின்மையை மேலிட்டுக் கொள்ளற்க.
விளக்கம்:
('நோவு' என்னும் முதனிலைத் தொழிற் பெயர், ஈண்டு அது சொல்லுதற்கண் ஆயிற்று. பகைவர்கண் தவிர்வது கூறுவார் நட்டார்கண் தவிர்வதும் உடன் கூறினார். இதனான் அவ்விரு பகுதிக்கண்ணும் செய்வது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தாம் வருத்த முற்றதனை அறியாதார்க்கு வருத்த முற்றுச் சொல்லா தொழிக; அதுபோல, பகைவரிடத்துத் தமது மென்மையைத் தோற்றுவித்தலை விரும்பாதொழிக,
(என்றவாறு). இது பகைவர்மாட்டுத் தமது மென்மையைத் தோற்றுவியா தொழிக்வென்றது.