குறள் 876

பகைத்திறந்தெரிதல்

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்

thaerinum thaeraa vitinum alivinkan
thaeraan pakaaan vidal


Shuddhananda Bharati

Appraising enemies

Trust or distrust; during distress
Keep aloof; don't mix with foes.


GU Pope

Knowing the Quality of Hate

Whether you trust or not, in time of sore distress,
Questions of diffrence or agreement cease to press.

Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him).


Mu. Varadarajan

இதற்குமுன்‌ ஒருவனைப்பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும்‌, தெளியாவிட்டாலும்‌, அழிவு வந்தகாலத்தில்‌ அவனைத்‌ தெரியாமலும்‌ நீங்காமலும்‌ வாளா விடவேண்டும்‌.


Parimelalagar

தேறினும் தேறாவிடினும் - பகைவனை முன் தெளிந்தானாயினும் தெளிந்திலனாயினும்; அழிவின்கண் தேறான் பகான் விடல் - தனக்குப் புறத்தொரு வினையால் தாழ்வு வந்துழிக் கூடாது நீக்காது இடையே விட்டு வைக்க.
விளக்கம்:
('முன் தெளிந்தான் ஆயினும், அப்பொழுது கூடாதொழிக' என்றது, உள்ளாய் நின்று கெடுத்தல் நோக்கி. 'தெளிந்திலனாயினும் அப்பொழுது நீக்கா தொழிக' என்றது, அவ்வழிவிற்குத் துணையாதல் நோக்கி. இதனான் நொதுமலாக்கற்பாலது கூறப்பட்டது)


Manakkudavar

(இதன் பொருள்) பகைவனை ஆக்கமுள்ள காலத்து நட்டோனென்று தெளி யலுமாம்; பகைவனென்று ஐயப்படலுமாம் ; அழிவுவந்தவிடத்து, தெளிவதுஞ் செய்யாது நீக்குவதுஞ் செய்யாது ஒழுகுக,
(என்றவாறு). இது பகையாயினார் மாட்டு அழிவின்கண் செய்வதோரியல்பு கூறிற்று.