Kural 875
குறள் 875
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று
thanthunai inraal pakaiyirantaal thaanoruvan
inthunaiyaak kolkavatrrin onru
Shuddhananda Bharati
Alone, if two foes you oppose
Make one of them your ally close.
GU Pope
Without ally, who fights with twofold enemy o'ermatched,
Must render one of these a friend attached.
He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help(to himself).
Mu. Varadarajan
தனக்கு உதவியான துணையோ இல்லை; தனக்குப் பகையோ இரண்டு; தானோ ஒருவன்; இந்நிலையில் அப்பகைகளுள் ஒன்றை இனிய துணையாகக் கொள்ள வேண்டும்
Parimelalagar
தன்துணை இன்று - தனக்கு உதவும் துணையோ எனில் இல்லை; பகை இரண்டு - நலிவு செய்யும் பகையோ எனின் இரண்டு; ஒருவன் தான் அவற்றின் ஒன்று இன்துணையாக் கொள்க - அங்ஙனமாய் நின்றவழி, ஒருவனாகிய தான் அப்பகை இரண்டனுள் பொருந்தியது ஒன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்க.
விளக்கம்:
(பொருந்தியது - ஏனையதனை வேறதற்கு ஏற்றது: அப்பொழுது அவ்வெல்லும் பொழுது. திரிபின்றாகச் செய்து கொள்க என்பார், 'இன்துணையா' என்றார். ஆல்கள்: அசை. இவை இரண்டு பாட்டானும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) பகையிரண்டாய், தான் ஒருவனாய், தனக்குத் துணையும் இல்னா யின், அப்பகை யிரண்டினுள் ஒன்றை இனிய துணையாகச் செய்து கொள்க. இஃது இருவரோடு பகை கொள்ளலாகா தென்றது.