குறள் 874

பகைத்திறந்தெரிதல்

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு

pakainatpaak kondolukum panputai yaalan
thakaimaikkan thangkitrru ulaku


Shuddhananda Bharati

Appraising enemies

This world goes safely in his grace
Whose heart makes friends even of foes.


GU Pope

Knowing the Quality of Hate

The world secure on his dexterity depends,
Whose worthy rule can change his foes to friends.

The world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship.


Mu. Varadarajan

பகையையும்‌ நட்பாகச்‌ செய்துகொண்டு நடக்கும்‌ பண்புடையவனது பெருந்தன்மையில்‌ உலகம்‌ தங்கியிருப்பதாகும்‌.


Parimelalagar

பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன் தகைமைக்கண் - வேண்டியவழிப் பகையை வேறுபடுத்துத் தனக்கு நட்பாகச் செய்து கொண்டொழுகும் இயல்பினையுடைய அரசனது; பெருமையுள்ளே தங்கிற்று உலகு - அடங்கிற்று இவ்வுலகு.
விளக்கம்:
(வேண்டியவழி என்பது ஆக்கத்தான் வந்தது வேறுபடுத்தல் - பகை நிலைமையின் நீங்குதல். ஒழுகல்: நீதி வழியொழுகல். பெருமை - பொருள், படை என இருவகைத்தாய ஆற்றல்: அதன் வழித்தாதற்கு எஞ்ஞான்றும் திரிபின்மையின், அத்துணிவு பற்றித் 'தங்கிற்று' என்றார்.) -.


Manakkudavar

(இதன் பொருள்) பகைவரை நட்புபோலக் கொண்டொழுக வல்ல பண்புடையவன் பெருமையின்கீழே உலகம் தங்கும்,
(என்றவாறு). இது பகை கொள்ளாமையால் வரும் பயன் கூறிற்று.