Kural 872
குறள் 872
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை
villaer ulavar pakaikolinum kollatrka
sollaer ulavar pakai
Shuddhananda Bharati
Incur the hate of bow-ploughers
But not the hate of word-ploughers.
GU Pope
Although you hate incur of those whose ploughs are bows,
Make not the men whose ploughs are words your foes!
Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words.
Mu. Varadarajan
வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகைகொள்ளக்கூடாது.
Parimelalagar
வில் ஏர் உழவர் பகை கொளினும் - ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொண்டானாயினும்; சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க - சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக.
விளக்கம்:
('சொல்' ஆகுபெயரான் நீதி நூல்மேல் நின்றது. வீரம் சூழ்ச்சி என்னும் ஆற்றல்களுள் வீரமே உடையாரோடு பகை கொண்டால் கேடு வருதல் ஒருதலையன்று. வந்ததாகினும், தனக்கேயாம். ஏனைச் சூழ்ச்சி உடையாரோடாயின் தன் வழியினுள்ளார்க்கும் தப்பாது வருதலின், அது கொள்ளினும் இது கொள்ளற்க என்றார். உம்மையான் அதுவும் ஆகாமை பெறுதும், இரண்டும் உடையாரோடு கொள்ளலாகாமை சொல்ல வேண்டாவாயிற்று. உருவக விசேடம்.)
Manakkudavar
(இதன் பொருள்) வில்லை ஏராக உடைய பகைவரோடு பகைகொளினும், சொல்லை ஏராக உடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக,
(என்றவாறு). இஃது அரசரோடு பகைகொளினும் அமைச்சரோடு பகைகொள்ளலாகா தென்றது.