குறள் 855

இகல்

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்

ikalaethir saaindhtholuka vallaarai yaarae
mikalookkum thanmai yavar


Shuddhananda Bharati

Hatred

Who can overcome them in glory
That are free from enmity?


GU Pope

Hostility

If men from enmity can keep their spirits free,
Who over them shall gain the victory?

Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?


Mu. Varadarajan

இகல்‌ என்று சொல்லப்படும்‌ துன்பங்களில்‌ கொடிய துன்பம்‌ கெட்டுவிட்டால்‌. அஃது ஒருவனுக்கு இன்பங்களில்‌ சிறந்த இன்பத்தைக்‌ கொடுக்கும்‌.


Parimelalagar

இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை - தம் உள்ளத்து 'மாறுபாடு தோன்றியவழி அதனை ஏற்றுக் கொள்ளாது சாய்ந்தொழுக வல்லாரை; மிகல் ஊக்கும் தன்மையவர்யார் - வெல்லக்கருதும் தன்மையுடையார் யாவர்?
விளக்கம்:
(இகலை ஒழிந்தொழுகல் வேந்தர்க்கு எவ்வாற்றானும் அரிதாகலின், 'வல்லாரை' என்றும், யாவர்க்கும் நண்பாகலின் அவரை வெல்லக் கருதுவார் யாவரும் இல்லை என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) இகலின் எதிர் சாய்ந்தொழுக வல்லாரை வெல்ல நினைக்கும் தன்மையவர் யார் தான், (எ - று ) சாய்ந்தொழுக வேண்டுமென்றார் அது தோல்வி யாகாதோ வென்றார்க்கு , அவரை வெல்வாரில்லை யென்றார்.