குறள் 854

இகல்

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்

inpaththul inpam payakkum ikalaennum
thunpaththul thunpang ketin


Shuddhananda Bharati

Hatred

Hate-the woe of woes destroy;
Then joy of joys you can enjoy.


GU Pope

Hostility

Joy of joys abundant grows,
When malice dies that woe of woes.

If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight.


Mu. Varadarajan

இகல்‌ என்று சொல்லப்படும்‌ துன்பங்களில்‌ கொடிய துன்பம்‌ கெட்டுவிட்டால்‌, அஃது ஒருவனுக்கு இன்பங்களில்‌ சிறந்த இன்பத்தைக்‌ கொடுக்கும்‌.


Parimelalagar

இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும் - அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும்.
விளக்கம்:
(துன்பத்துள் துன்பம் - பலரொடு பொருது வலி தொலைதலான் யாவர்க்கும் எளியனாயுறுவது. அதனை இடையின்றியே பயத்தலின், 'இகல் என்னும்' என்றார். இன்பத்துள் இன்பம் - யாவரும் நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.)


Manakkudavar

(இதன் பொருள்) இன்பத்தின் மிக்க இன்பம் எய்தும்; மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் கெடுமாயின்,
(என்றவாறு). எல்லா இன்பத்தின் மிக்க வீடுபேற்றின்பம் எய்தும் என்றவாறு.