குறள் 856

இகல்

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து

ikalin mikalinithu yenpavan vaalkkai
thavalum kedalum naniththu


Shuddhananda Bharati

Hatred

His fall and ruin are quite near
Who holds enmity sweet and dear.


GU Pope

Hostility

The life of those who cherished enmity hold dear,
To grievous fault and utter death is near.

Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred.


Mu. Varadarajan

இகல்‌ கொள்வதால்‌ வெல்லுதல்‌ இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிப்போதலும்‌ அழிதலும்‌ விரைவில்‌ உள்ளனவாம்‌.


Parimelalagar

இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை - 'பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிது' என்று அதனைச் செய்வானது உயிர் வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து - பிழைத்தலும் முற்றக் கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம்.
விளக்கம்:
(மிகுதல் - மேம்மேல் ஊக்குதல். 'இனிது' என்பது தான் வேறல் குறித்தல். பிழைத்தல் - வறுமையான் இன்னாதாதல். முற்றக் கெடுதல் - இறத்தல். இவற்றால் 'நணித்து என்பதனைத் தனித்தனி கூட்டி, உம்மைகளை எதிரதும் இறந்தது தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும் உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறருடன் மாறுபாட்டின்கண் மிகுதல் இனிதென்று கருது மவனும், அவன் வாழ்க்கையும், சாதலும் கெடுதலும் நணித்து,
(என்றவாறு). நிரனிறை. இது சாயானாயின், உயிர்க்கேடும் பொருட்கேடு முண்டாமென்