Kural 851
குறள் 851
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
ikalaenpa yellaa uyirkkum pakalaennum
panpinmai paarikkum noi
Shuddhananda Bharati
Hatred is a plague that divides
And rouses illwill on all sides.
GU Pope
Hostility disunion's plague will bring,
That evil quality, to every living thing.
The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.
Mu. Varadarajan
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீய பண்பை வளர்க்கும் நோய் இகல் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.
Parimelalagar
எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை, பாரிக்கும் நோய் - எல்லா உயிர்கட்கும் பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்; இகல் என்ப - இகல் என்று சொல்லுவர் நூலோர்.
விளக்கம்:
(மக்களையும் விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லா உயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்று விளைத்தலின் 'பகல் என்னும் பண்பு இன்மை' என்றும் கூறினார். நற்குணம் இன்மை அருத்தாபத்தியால் தீக்குணமாயிற்று. இதனான் இகலது குற்றம் கூறப்பட்டது.)
Manakkudavar
இகலாவது பிறரோடு மாறுகொண்டால் வரும் குற்றங் கூறுதல். இஃது அறியாதார்க்கு உளதாமாதலான், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) எல்லா வுயிர்க்கும் வேறுபடுத லாகிய குணமின்மையைப் பரப் பும் துன்பத்தை, இகலென்று சொல்லுவார் அறிவோர்,
(என்றவாறு). இஃது இகலாவது இதுவென்று கூறிற்று.