Kural 849
குறள் 849
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு
kaanaathaan kaatduvaan thaankaanaan kaanaathaan
kantaanaam thaankanda vaaru
Shuddhananda Bharati
Sans Self-sight in vain one opens Sight
To the blind who bet their sight as right.
GU Pope
That man is blind to eyes that will not see who knowledge shows;-
The blind man still in his blind fashion knows.
One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself"wise in his own conceit".
Mu. Varadarajan
அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பான் தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான்.
Parimelalagar
காணாதாற் காட்டுவான் தான் காணான் - தன்னை எல்லாம் அறிந்தானாக மதித்தலான் பிறரால் ஒன்றறியும் தன்மையிலாதானை அறிவிக்கப்புகுவான் அவனாற் பழிக்கப்பட்டுத்தான் அறியானாய் முடியும்: காணாதான் தான் கண்டவாறு கண்டானாம் - இனி அவ்வறியுந் தன்மையில்லாதான் கொண்டது விடாமையான் தான் அறிந்தவாற்றால் அதனை அறிந்தானாய் முடியும்.
விளக்கம்:
(புல்லறிவாளர்க்கு நல்லறிவு கொளுவுதல் ஒருவாற்றானும் இயைவ தன்று என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) அறியாதானை அறிவிக்கப் புகுத்துமவன் தானறியான்; அவ்வறி யாதவன் தான் அறிந்த படியை அறிந்தானா யிருக்குமாதலான்,
(என்றவாறு). இது கொண்டது விடாமை புல்லறி வென்றது.