குறள் 847

புல்லறிவாண்மை

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு

arumarai chorum arivilaan seiyum
paerumirai thaanae thanakku


Shuddhananda Bharati

Petty conceit

The fool that slights sacred counsels
Upon himself great harm entails.


GU Pope

Ignorance

From out his soul who lets the mystic teachings die,
Entails upon himself abiding misery.

The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.


Mu. Varadarajan

அரிய மறைபொருளை மனத்தில்‌ வைத்துக்‌ காக்காமல்‌ சோர்ந்து வெளிப்படுத்தும்‌ அறிவில்லாதவன்‌ தனக்குத்‌ தானே பெருந்தீங்கு செய்துகொள்வான்‌.


Parimelalagar

அருமறை சோரும் அறிவிலான் - பெறுதற்கு அரிய உபதேசப் பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன்; தானே தனக்குப் பெருமிறை செய்யும் - அவ்வுறுதி அறியாமையால் தானே தனக்கு மிக்க வருத்தத்தைச் செய்து கொள்ளும்.
விளக்கம்:
('சோரும்' என இடத்து நிகழ் பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது. மிக்க வருத்தம்-பொறுத்தற்கு அரிய துன்பங்கள். இனி 'அருமறை சோரும்' என்பதற்குப் பிறரெல்லாம் 'உள்ளத்து அடக்கப்படும் எண்ணத்தை வாய் சோர்ந்து பிறர்க்கு உரைக்கும்' என்று உரைத்தார். அது பேணாமை என்னும் பேதைமையாவதன்றிப் புல்லறிவாண்மையன்மை அறிக.)


Manakkudavar

(இதன் பொருள்) அறிவில்லாதான் அரிதாக எண்ணின் மறைப்பொருளைச் சோரவிடுவன்; அதுவேயன்றி, தனக்குத்தானே பெரிய துன்பத்தினையும் செய்து கொள்ளுவன்,
(என்றவாறு). சோரவிடுதல் - பிறர்க்குச் சொல்லுதல். இது பொருட்கேடும் உயிர்க் கேடும் தானே செய்யுமென்றது.