குறள் 834

பேதைமை

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்

oathi unarndhthum pirarkkuraiththum thaanadangkaap
paethaiyin paethaiyaar il


Shuddhananda Bharati

Folly

No fool equals the fool who learns
Knows, teaches, but self-control spurns.


GU Pope

Folly

The sacred law he reads and learns, to other men expounds,-
Himself obeys not; where can greater fool be found?

There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and eventaught it to others, does not walk according to his own teaching.


Mu. Varadarajan

நூல்களை ஓதியும்‌, அவற்றின்‌ பொருளை உணர்ந்தும்‌, பிறர்க்கு எடுத்துச்‌ சொல்லியும்‌ தான்‌ அவற்றின்‌ நெறியில்‌ அடங்கி ஒழுகாத பேதைபோல்‌ வேறு பேதையர்‌ இல்லை.


Parimelalagar

ஓதி - மன மொழி மெய்கள் அடங்குதற்கு ஏதுவாய நூல்களை ஓதியும்; உணர்ந்தும் - அவ்வடக்கத்தான் வரும் பயனை உணர்ந்தும்; பிறர்க்கு உரைத்தும் - அதனை அறியலுறப் பிறர்க்கு உரைத்தும்; தான் அடங்காப் பேதையின் - தான் அவையடங்கி ஒழுகாத பேதைபோல; பேதையார் இல் - பேதையார் உலகத்து இல்லை.
விளக்கம்:
(உம்மை முன்னும் கூட்டப்பட்டது. இப்பேதைமை தனக்கு மருந்தாய இவற்றால் தீராமையானும், வேற்று மருந்து இன்மையானும், 'பேதையின் பேதையார் இல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பேதையது தொழில் பொதுவகையான் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.)


Manakkudavar

(இதன் பொருள்) நூல்களைக் கற்றறிந்தும், அவற்றைப் பிறர்க்கு இசையச் சொல்லி யும், தான் அடங்குதலைச் செய்யாத பேதையார்போலப் பேதையார் உலகத்தில் இல்லை,
(என்றவாறு)