குறள் 826

கூடாநட்பு

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்

nattaarpol nallavai sollinum ottaarsol
ollai unarap padum


Shuddhananda Bharati

False friendship

The words of foes is quickly seen
Though they speak like friends in fine.


GU Pope

Unreal Friendship

Though many goodly words they speak in friendly tone,
The words of foes will speedily be known.

Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand(their evil, import).


Mu. Varadarajan

நண்பர்போல்‌ நன்மையானவற்றைச்‌ சொன்ன போதிலும்‌ பகைமை கொண்டவர்‌ சொல்லும்‌ சொற்களின்‌ உண்மைத்‌ தன்மை விரையில்‌ உணரப்படும்‌.


Parimelalagar

நட்டார்போல் நல்லவை சொல்லினும் - நட்டார் போன்று நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும்; ஒட்டார் சொல் ஒல்லை உணரப்படும் - பகைவர் சொற்கள் அது பயவாமை அச்சொல்லிய பொழுதே அறியப்படும்.
விளக்கம்:
('சொல்லினும்' எனவே, சொல்லாமையே பெற்றாம். ஒட்டாராதலால் தீமை பயத்தல் ஒருதலை என்பார். 'ஒல்லை உணரப்படும் என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) உற்றாரைப்போல் நல்ல வானவை சொன்னாராயினும், பகைவர் சொல்லுஞ்சொல் விரைந்தறியப்படும், (எ - று )