குறள் 824

கூடாநட்பு

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்

mukaththin iniya nakaaa akaththinnaa
vanjcharai anjchap padum


Shuddhananda Bharati

False friendship

Fear foes whose face has winning smiles
Whose heart is full of cunning guiles.


GU Pope

Unreal Friendship

'Tis fitting you should dread dissemblers' guile,
Whose hearts are bitter while their faces smile.

One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart.


Mu. Varadarajan

முகத்தால்‌ இனிமையாகச்‌ சிரித்துப்‌ பழகி அகத்தில்‌ தீமை கொண்டுள்ள வஞ்சகருடன்‌ நட்புக்‌ கொள்வதற்கு அஞ்சவேண்டும்‌.


Parimelalagar

முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சரை - கண்ட பொழுது முகத்தால் இனியவாகச் சிரித்து எப்பொழுதும் மனத்தால் இன்னாராய வஞ்சரை; அஞ்சப்படும் - அஞ்சல் வேண்டும்.
விளக்கம்:
(நகையது வகை பற்றி 'இனிய' என்றும் அகத்துச் செற்றம் நிகழவும் அதற்கு மறுதலையாய நகையைப் புறத்து விளைத்தலின் 'வஞ்சர்' என்றும், அச்செற்றம் குறிப்பறிதற் கருவியாய முகத்தானும் தோன்றாமையின் 'அஞ்சுதல் செய்யப்படும்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் குற்றத்திற்கு ஏதுவாய் அவர் கொடுமை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) முகத்தால் இனியவாக நக்கு மனத்தால் இன்னாதவாக நினைக்கும் வஞ்சகரை அஞ்ச வேண்டும்,
(என்றவாறு).