குறள் 823

கூடாநட்பு

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது

palanalla katrrak kataiththu mananallar
aakuthal maanaark karithu


GU Pope

Unreal Friendship

To heartfelt goodness men ignoble hardly may attain,
Although abundant stores of goodly lore they gain.

Though (one’s) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.


Mu. Varadarajan

பல நல்ல நூல்களைக்‌ கற்றுத்‌ தேர்ந்தபோதிலும்‌, அவற்றின்‌ பயனாக நல்ல மனம்‌ உடையவராகப்‌ பழகுதல்‌, (உள்ளன்பினால்‌) மாட்சியடையாதவர்க்கு இல்லை.


Parimelalagar

நல்ல பல கற்றக் கடைத்தும் - நல்லன பல நூல்களைக் கற்றவிடத்தும், மனம் நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது - அதனான் மனம் திருந்தி நட்பாதல் பகைவர்க்கு இல்லை
விளக்கம்:
(நல்லன - மனக் குற்றம் கெடுப்பன. ‘மனம் நல்லர் எனச் சினைவினை முதன்மேல் நின்றது. நல்லர் ஆகுதல் செற்றம் விடுதல். ‘உள்ளே செற்றமுடையாரைக் கல்வியுடைமை பற்றி நட்பு என்று கருதற்க’ என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) நல்லவாகிய பல நூல்களைக் கற்றவிடத்தும், மனநல்லாராகு தல் மாட்சிமையில்லார்க்கு அரிது,
(என்றவாறு). இது கல்வியால் அறிதல் அரிதென்றது.