குறள் 822

கூடாநட்பு

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்

inamponru inamallaar kaenmai makalir
manampola vaeru padum


Shuddhananda Bharati

False friendship

Who pretend kinship but are not
Their friendship's fickle like woman's heart.


GU Pope

Unreal Friendship

Friendship of those who seem our kin, but are not really kind.
Will change from hour to hour like woman's mind.

The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.


Mu. Varadarajan

இனம்‌ போலவே இருந்து உண்மையில்‌ இனம்‌ அல்லாதவரின்‌ நட்பு, பொதுமகளிரின்‌ மனம்போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்‌.


Parimelalagar

மனம்போல வேறு படும். இனம்போன்று இனமல்லார் கேண்மை - தமக்கு உற்றார் போன்று உறாதாரோடு உளதாய நட்பு; மகளிர் மனம்போல வேறுபடும் - இடம் பெற்றால் பெண்பாலார் மனம் போல வேறுபடும். (அவர் மனம் வேறுபடுதல் ''பெண் மனம் பேதின்று ஒருப்படுப்பேன் என்னும் எண்ணில் ஒருவன்''
விளக்கம்:
(வளையாபதி புறத்திரட்டு - பேதைமை, 18) என்பதனானுமறிக. நட்பு வேறுபடுதலாவது பழைய பகையேயாதல் இவை இரண்டு பாட்டானும் கூடா நட்பினது குற்றம் கூறப்பட்டது.) --


Manakkudavar

(இதன் பொருள்) நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு, பெண் மனம் போல் வேறுபடும் ; ஆதலால், அவருள்ளக் கருத்தறிந்து கொள்க. (எ-று). இது நட்பாயொழுகுவாரது உள்ளக்கருத்தறிய வேண்டுமென்றது.