குறள் 8

கடவுள் வாழ்த்து

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

aravaali andhthanan thaalsaerndhthaark kallaal
piravaali neendhthal arithu


Shuddhananda Bharati

The praise of God

Who swims the sea of vice is he
Who clasps the feet of Virtue's sea.


GU Pope

The Praise of God

Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,
'Tis hard the further bank of being's changeful sea to attain.

None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.


Mu. Varadarajan

அறக்கடலாக விளங்கும்‌ கடவுளின்‌ திருவடிகளைப்‌ பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல்‌, மற்றவர்‌ பொருளும்‌ இன்பமுமாகிய மற்றக்‌ கடல்களைக்‌ கடக்க முடியாது.


Parimelalagar

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கு அல்லாது; பிற ஆழி நீந்தல் அரிது - அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது
விளக்கம்:
((அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும் இன்பமும் 'பிற' எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவாக உடையான் ஆகலின், 'அற ஆழி அந்தணன்' என்றார். 'அற ஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப் புணையைச் சேராதார் கரை காணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.)


Manakkudavar

(இதன் பொருள்) மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம்பொறிகளின் வழி யாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்,
(என்றவாறு). இது சாவில்லை யென்றது.