Kural 7
குறள் 7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
thanakkuvamai illaathaan thaalsaerndhthaark kallaal
manakkavalai maatrral arithu
Sri Aurobindo
Not to the feet arriving of the one with whom none can compare,
Hard from the heart to dislodge is its sorrow.
Shuddhananda Bharati
His feet, whose likeness none can find,
Alone can ease the anxious mind.
GU Pope
Unless His foot, 'to Whom none can compare,' men gain,
'Tis hard for mind to find relief from anxious pain.
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.
Mu. Varadarajan
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
Parimelalagar
தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது.
விளக்கம்:
("உற்றபல தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினை யென்னு மிரண்டு வினை யுஞ் சேரா ; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு,
(என்றவாறு).