குறள் 788

நட்பு

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

udukkai ilandhthavan kaipola aangkae
idukkan kalaivathaam natpu


Shuddhananda Bharati

Friendship

Friendship hastens help in mishaps
Like hands picking up dress that slips.


GU Pope

Friendship

As hand of him whose vesture slips away,
Friendship at once the coming grief will stay.

(True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garmentis loosened (before an assembly).


Mu. Varadarajan

உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்‌ காப்பது போல்‌, (நண்பனுக்குத்‌ துன்பம்‌ வந்தால்‌) அப்பொழுதே சென்று துன்பத்தைக்‌ களைவது நட்பு.


Parimelalagar

உடுக்கை இழந்தவன் கைபோல - அவையிடை ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று உதவி அவ்விளிவரல் களையுமாறு போல; ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம் - நட்டவனுக்கு இடுக்கண் வந்துழி அப்பொழுதே சென்று உதவி அதனைக் களைவதே நட்பாவது.
விளக்கம்:
(அற்றம் காத்தற்கண் கை தன் மனத்தினும் முற்படுதலின், அவ்விரைவு இடுக்கண் களைவுழியும் அதற்கு ஒத்த தொழில் உவமையினும் வருவிக்க. உடையவன் தொழில் நட்பின்மேல் ஏற்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) உடைசோரநின்றானுக்குக் கை சென்று உடைசோராமற் காத் தாற்போல் , இடுக்கண் வந்தால் அப்பொழுதே அவ்விடுக்கணை நீக்குவது நட்பா வது, (எ - ற).