குறள் 782

நட்பு

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு

niraineera neeravar kaenmai piraimathip
pinneera paethaiyaar natpu


Shuddhananda Bharati

Friendship

Good friendship shines like waxing moon,
The bad withers like waning moon.


GU Pope

Friendship

Friendship with men fulfilled of good Waxes like the crescent moon;
Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon.

The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon.


Mu. Varadarajan

அறிவுடையவரின்‌ நட்பு பிறை நிறைந்துவருதல்‌ போன்ற தன்மையுடையன; அறிவில்லாதவரின்‌ நட்பு முழுமதி தேய்ந்து பின்செல்லுதல்‌ போன்ற தன்மையுடையன.


Parimelalagar

நீரவர் கேண்மை பிறை நிறை நீர-அறிவுடையார் நட்புக்கள் பிறை நிறையும் தன்மைபோல நாள்தோறும் நிறையுந் தன்மையவாம்; பேதையார் நட்பு மதிப் பின் நீர-மற்றைப் பேதைமையுடையார் நட்புக்கள் நிறைந்த மதி பின் குறையுந் தன்மை போல நாள்தோறும் குறையுந்தன்மையவாம்.
விளக்கம்:
('நீரவர்' என்றார், இனிமை பற்றி, கேண்மை, நட்பு என்பன ஒரு பொருட்கிளவி செய்தாரது பன்மையான் நட்பும் பலவாயின. அறிவுடையாரும் அறிவுடையாரும் செய்தன முன் சுருங்கிப் பின் பெருகற்கும், பேதையாரும் பேதையாரும் செய்தன முன் பெருகிப் பின் சுருங்கற்கும் காரணம் தம்முள் முன் அறியாமையும் பின் அறிதலும் ஆம்.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறை நிறையும் நீர்மைபோல், ஒருநாளைக் கொருநாள் வளரும் அறிவுடையார் கொண்ட நட்பு ; மதியின் பின்னீர்மை போல் ஒருநாளைக் கொரு நாள் தேயும் பேதையார் கொண்ட நட்பு,
(என்றவாறு). இஃது அறிவுடையார் நட்பு வளருமென்றும் அறிவில்லாதார் நட்புத் தேயு மென்றுங் கூறிற்று.